துன் டாக்டர் மகாதிர் பின் முகமது
1. துன் டாக்டர் மகாதிர் பின் முகமதின் இயற்கை பெயர் மஹாதிர் த/பெ இஸ்கந்தர் குட்டி.
2 . மகாதிர் ஜூலை மாதம் 10 ஆம் நாள் 1925 இல் கெடா மாநிலத்தில் பிறந்தார்.
3 . இவரின் தந்தை இஸ்கந்தர் குட்டி கேரளா மாநிலத்தில் இருந்து இங்கு புலம் பெயர்ந்து வந்த ஒரு மலையாளி. இவர் ஒரு பள்ளி ஆசிரியர்.
4 . இவரின் தாயர் வான் தெம்பாவான் மலேசியாவில் பிறந்த மலாய்காரர் .
5 . தான் ஒரு இந்திய வம்சாவளியில் வந்தவர் என்பதை ஒத்துகொண்டாலும் இவர் தன்னை ஒரு மலாய்காரர் என குறிப்பிட படுவதையே விரும்புகிறார். அது மட்டும் இன்றி மலாய் மேலாண்மை குறித்து இவர் அதிகம் பேசியும் எழுதியும் உள்ளார்.
6 . இவர் மருத்துவம் பயின்ற சிங்கபூர் பல்கலைகழகத்தில் இவர் தன்னை ஒரு இந்தியன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
7 . தனது இந்திய அடையாளத்தை இவர் எப்போதுமே வெளிகாட்டுவதில்லை. அப்படி சொல்வதை வெட்கமாக கருதுவதாக கருத்து உள்ளது.
8 .1981 ஆம் ஆண்டு ஜூலை 16 - 31 அக்டோபர் 2003 வரை இவர் பிரதமராக இருந்தார்.
9. நான்காவது பிரதமரான இவர் ஆசியாவின் நீண்ட காலம் சேவையாற்றிய பிரதமர் ஆவர். இவரின் கீழ் நால்வர் துணைப்பிரதமராக இருந்துள்ளனர்.
10. 1945 இல் அரசியலில் ஈடுபட ஆரம்பிட்ட இவர் 1946 இல் ஆரம்பிக்க பட்ட அம்னோவின் ஆரம்பகால உறுப்பினர் ஆவர்.
11. சீனர்களின் வாக்குகள் தேவை இல்லை என அறிவித்ததனால் 1969 இல் நடந்த தேர்தலில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோல்விகண்டார்.
2004 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் மகதீரை சிறப்பு செய்யும் வகையில் TM கட்டிடத்தில் அவரின் padam |
13. இவரது ஆட்சி காலத்தில் மலேசியா துரித முன்னேற்றம் அடைத்தது.
14. இவரது ஆட்சி காலத்தில் தான் இந்தியர்கள் பலவகையிலும் ஓரங்கட்டப்பட்டனர்.
15. இவரது ஆட்சி காலத்தில் பேச்சு சுதந்திரம் குறைவாக இருந்தது.
16. பிற தலைவர்கள் உருவாகுவதை விரும்பாதவர் என்ற குற்றசாட்டும் இவர் மேல் உள்ளது.
17 . 1987 இல் கட்சி தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகள் காரணமாக 1998 இல் அம்னோ நீதிமன்ற தீர்ப்பு முலம் தடை செய்ய பட்டதை தொடர்ந்து இவர் புதிய அம்னோவை துவக்கினார்.
No comments:
Post a Comment