கொள்கை மாற்றத்தால் பேறுகுறைந்தவர்களுக்கு மகிழ்ச்சியற்ற தீபாவளி
கடந்த ஜூலை மாதத்திலிருந்து பொதுநல இலாகாவிலிருந்து நிதி உதவி பேறுகுறைந்தவர்ளுக்கு கிடைக்காததால் அவர்களுக்கு நாளைய தீபாவளி கசப்பானதாக இருக்கும்.
இருபதுக்கு மேற்பட்ட பேறுகுறைந்தவர்கள் தனிப்பட்ட முறையில் கடந்த அக்டோபரில் புகார் செய்திருந்தனர். ஆனால், அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலாகி விட்டது என்று பேறுகுறைந்தவர்களுக்கான அரசு சார்பற்ற அமைப்பான ஐஎல்டிசி கூறுகிறது.
அந்த என்ஜிஓவின் தலைவரான பிரான்சிஸ் சிவா பாதிக்கப்பட்டவர்களில் பலர் அவரை இன்று காலையில் அழைத்து தங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்த மாத அலவன்ஸ் ரிம300 மீண்டும் தரப்படவில்லை என்று புகார் செய்தனர் என்று அவர் கூறினார். இந்த அலவன்ஸ் மருந்து மற்றும் இதர அவசியமானப் பொருள்களை வாங்குவதற்கு உதவியாக இருந்ததது என்று அவர் மேலும் கூறினார்.
அந்த சமூக பொதுநல இலாகா (ஜேகேஎம்) அதிகாரிகள் அந்த பேறுகுறைந்தவர்கள் ஜேகேஎம் அலுவலகத்திற்கு வந்து ஏகப்பட்ட பக்கங்களைக் கொண்ட பாரங்களைப் பூர்த்தி செய்து, அவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதார ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார் என்று சிவா தெரிவித்தார்.
“நாங்கள் இத்தகவல்களைப் பெறுவதற்கு அவர்களுடைய அலுவலகத்திற்கு தவழ்ந்து செல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது என்ன?”, என்றாரவர்.
“கடந்த அக்டோபர் 23 இல், அவர்களது கோம்பாக் அலுவலகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்பிரச்னைக்கு ஒரு வழி காணப்படும் என்று அரசு அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், இன்று காலை வரையில் பலர் இன்னும் அவர்களுடையப் பணத்தைப் பெறவில்லை.”
தேசிய கணக்காயவாளரின் 2012 ஆம் ஆண்டுக்கான அறிக்கைக்குப் பின்னர், ஜேகேஎம் நிதி உதவிகள் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தி எல்லாம் முறையாக நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்களாம்.
அவர்கள் தங்களுடைய கொள்கைகளில் மாற்றம் செய்திருந்தால் அதனை எங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். கொள்கை மாற்றம் என்று கூறிக் கொண்டு பணம் கொடுப்பத்தை திடீரென்று நிறுத்தி விட்டால், நாங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துவது என்று சிவா வினவினார்.
தொடர்பு கொண்ட போது, புத்ராஜெயாவை தளமாகக் கொண்ட ஜேகேஎம் இயக்குனர் விளக்கமளிக்க மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment