Vanakkam Malaysia
விரிவான செய்திகள்
ஊனத்தை வென்றவர்கள்
27-06-2009 (14:20:58) ஊனத்தை வென்றவர்கள்
'ஊனம்...ஊனம்...ஊனம் இங்கே ஊனம் யாருங்க...உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனமில்லேங்க. உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை. உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லை'.
இந்தப் பாடலுக்கு உதாரணமாக இருக்கிறார் பிரான்சிஸ் சிவா என்பவர்.
இவருடைய வாழ்க்கை எல்லாம் ஒரு சக்கர நாற்காலியில்தான். அவரின் சோதனையான அனுபவங்களையும் அதைச் சாதனையாக்கியது எப்படி என்றும் கேட்டோ ம். இதோ அவரே விவரிக்கிறார்.
'எனக்கு 26 வயசு இருக்கும். அப்போது ஓர் இஞ் சியனியரிங் கம்பெனியில் வேலை பார்த்தேன். அப் போதே எனக்கு 3 ஆயிரம் வெள்ளி சம்பளம்.ஒரு நாள் காரில் போகும்போது பகாவ் அருகே விபத்துக்குள்ளானேன். முதுகுத் தண்டில் அடிபட்டு கால்கள் நடக்க முடியாமல் போய் விட்டதுஐந்து ஆண்டுகள் மருத்துவமனைப் படுக்கையில் கழிந்தன.
ஒரு வருடம் இந்தியாவில் சிகிச்சை பெற் றேன். எந்தப் பயனும் இல்லை.அப்புறம் வாழ்க்கையே சக்கர நாற்காலி யில்தான். 23 வருடங்களை கடத்தி விட் டேன்.
ஆரம்ப காலத் தில் நான் பட்ட வேத னையை விவரிக்க முடியாது. பிறக்கும் போதே ஊனமாக இருந்திருந்தால் ஒன்றும் தெரியாது. நன்றாக நடந்து ஓடி ஆடி திரிந்த பின்னால் ஓய்ந்திருப்பதைப் போல் கொடுமை உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
சொந்தமாக இஞ்சினியரிங் கம்பெனி திறக்க வேண்டும் என்பது என்னுடைய வெறி.
ஆனால் ஊன முற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இறைவன் நினைத்து விட்டான் போலும். சொக்சோ பணம் வருகிறது. இன்சூ ரன்ஸ் கிடைத்தது. அதனால் வாழ்க்கையை சமாளிக்க முடிகிறது. ஆனால் இப்படியே வாழ்க்கையக் கழிக்க விரும்பவில்லை.
விபத்தில் சிக்கி நடமாட இயலாமல் போய் விட் டால் இத்தோடு வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது எனக் கருதி பலர் மனம் ஒடிந்து போய் மன நோயா ளிகள் போல் ஆகிவிடுகிறார்கள்.
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு நானே வீட்டிற்குள் ஒழிந்து கொண்டுதான் இருந்தேன். யாரையும் பார்க்க மாட்டேன். வெட்கப்பட்டுக் கொண்டு வெளியே வரமாட்டேன்.
அதனால்,அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச் சியை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன்.
அத னால் என்னைப் போன்ற சில நண்பர்களை சேர்த்து ஊனமுற்றோர் தன்னிலைப் பயிற்சி மையம் என்ற ஓர் அமைப்பை ரவாங்கில் நடத்தி வருகிறேன்.
விபத்தில் சிக்கி ஆதரவில்லாமல் இருப்பவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களை எங்கள் மையத்திற்கு அழைத்து வந்து தங்க வைக்கிறோம். எங்களை பார்த்தவுடன் அவர்களுக்கு தன்னம்பிக்கை வந்து விடுகிறது. எப்படி வாழப்போகிறோம் என தவித் தவர்களுக்கு இப்படியும் வாழலாம் என கற்றுக் கொடுக்கிறோம்.எங்கள் அமைப்பில் 165 பேர் உறுப்பினர்கள்.
புதி தாக வருபவர்களுக்கு நாங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கிறோம். நம்மாளும் வாழ முடியும் என்ற தன்னம் பிக்கையை ஏற்படுத்துகிறோம். சுயமாக வேலை களைச் செய்து கொள்வதற்கு பயிற்சி கொடுக்கி றோம்.
ஊனமுற்றவர்களுக்கு அரசாங்கம் நிறைய சலுகை அளிக்கிறது. இது நிறையப்பேருக்கு தெரியாது. இந்தச் சலுகைகளை எப்படி பெறுவது என்ற வழி முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம்.
எந்தவித சிரமமும் இல்லாமல் எங்கள் அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. அரசாங்கம் உதவி செய் கிறது. சில நிறுவனங்கள் உதவி செய்கின்றன. இரக்க மனம் உள்ளவர்கள் இயன்றதை கொடுக்கி றார்கள்.
இருந்தாலும் பொருளாதார மந்த நிலை நாட்டில் ஏற்பட்டதால் பணப்பற்றாக்குறை எழுந் துள்ளது. அதைச் சமாளிக்க தடுமாறுகி றோம். அதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தி நிதி திரட்டும் நோக்கத்தில் இருக்கிறோம்.
மின்னல் எப்.எம்.மின் இசைப்பயணம் என்ற கலைநிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணியில் இருந்து இரவு 11.30 மணிவரை பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக கணிசமான நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறோம்.
பலர் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருக்கிறார்கள். மலேசிய நண்பன் நிர்வாக இயக்குனர் ஷபி சிறப்பு வருகை தருகி றார். எங்களுக்கு உதவ நினைக்கின்ற நல்லுள்ளங்கள் நிகழ்ச்சி நாளன்றும் செய்ய லாம்.
ரவாங் கோலகாரிங் பள்ளி மைதானத் தில் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. கால்கள் செய லிழந்து இருந்தாலும் குறிக்கோள்களில் வெற்றி கண்ட நாங்கள் படைப்பு கண்டு ஊக்கம் அளிக்க உங்களை அழைக்கிறோம்.
இவ்வாறு ஊனமுற்றோர் தன்னிலை பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்சிஸ் சிவா குறிப்பிடுகி றார். மேல் விவரங்களுக்கு தொலைபேசி: 03-60936292, 019-3385959