Malaysiakini
சிலாங்கூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள்
(செய்தி)
சிலாங்கூர் ஊராட்சி மன்ற கவுன்சிலர்களின் பட்டியல் முடிவு செய்யப்பட்டிருப்பதாக மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார்.

மொத்தம் 288 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர் அவர்களின் பெயர்களைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
அவர்களின் பெயர்களை அந்தந்த ஊராட்சி மன்றங்கள்தாம் அறிவிக்கும் என்று இன்று பிற்பகல் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் காலிட் கூறினார்.
சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
அந்தப் பட்டியலில் 25 விழுக்காட்டினர் நிபுணர்கள், சமுக ஆர்வலர்கள், கல்விமான்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், .
எஞ்சிய 75 விழுக்காட்டினர் பக்காத்தான் ரக்யாட் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள்.
அதிலும் கெஅடிலான் உறுப்பினர்கள் அதிகம் இடம்பெற்றிருப்பார்கள் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு கூறினார்.
உடற்குறை உள்ளவர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக காலிட் தெரிவித்தார்.
“இந்தப் பட்டியலைப் பார்த்தால், இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ இடம்பெறவில்லை என்பதைக் காண்பீர்கள்.
முன்பு (பாரிசான் ஆட்சியில்) இதற்கு நேர்மாறாக இருந்தது”, என்று காலிட் கூறினார்.
No comments:
Post a Comment